×

டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்

* உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது, நறுக்கிய வில்லைகளின் மேல் சிறிது பயத்தம் மாவு தூவிவிட்டுப் பொரித்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.

* கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா? பிரெட் ஸ்லைஸை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் கட்லெட்டின் சுவை கூடும்.

* ரசப்பொடி இல்லாத போது ரசம் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிளகு சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம் பருப்பையும் வைத்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக இருக்கும்.

* கடலைப் பருப்பு வடை செய்வதற்கு பதிலாக காராமணியை ஊறவைத்து அத்துடன் வெங்காயம், சோம்பு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து, அரைத்து வடை சுட்டு, சுடச்சுட சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

* அடைக்கு ஊறவைக்கும் அரிசி, பருப்புடன் சிறிது கொண்டைக் கடலையையும் ஊறவைத்து, அரைத்து அடை செய்தால் ருசியாக இருக்கும்.

* பயத்தம் பருப்பு சுண்டல் செய்யும்போது பருப்பை வாசனை வரும்படி வறுத்துவிட்டுச் செய்தால் சுண்டல் உதிரி உதிரியாக வரும்.

Tags :
× RELATED கிச்சன் டிப்ஸ்