×

கறம்பக்குடி அருகே கன்னியான்கொல்லை கிராமத்தில் பழுதடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சீரமைக்க கோரிக்கை

கறம்பக்குடி : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கரு வட தெரு ஊராட்சி கன்னியான் கொல்லை கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்களும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளும் அமைந்துள்ளன இந்த கிராமத்தில் வசிக்கும் பொது மக்களின் நலன் கருதி குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு 10, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

இதன்மூலம் பொது மக்கள் தங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்து நீர் கசிந்த வண்ணம் உள்ளது.
இதன் காரணமாக கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் குடிநீருக்காக பற்றாக்குறை ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அப்பகுதி மக்களின் நலன் கருதி பழுதடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சீரமைத்தும் பராமரித்தும் கூடுதல் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என சம்மந்தப்பட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Kanniyankollai village ,Karambakudy , Karambakudy: Pudukottai District Karambakudy Union Karu North Street Panchayat More than a thousand civilians in Kannian Kollai village
× RELATED புதுக்கோட்டையில் 27வது நாளாக தொடரும் போராட்டம்