×

ஆலங்குளத்தில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேருடன் தோண்டி மறுநடவு-இளைஞர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

ஆலங்குளம் : நான்குவழிச்சாலைக்காக ஆலங்குளத்தில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை வேருடன் பிடுங்கி மறுநடவு செய்த பசுமை இயக்கம், அசுரா நண்பர்கள், சமூக ஆர்வலர்களை பொதுமக்கள் பாராட்டினர். நெல்லை-தென்காசி நான்குவழிச்சாலை பணிக்காக நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஒப்பந்ததாரர்களால் சாலையோர மரங்கள் வெட்டப்பட்டும், சில இடங்களில் மாற்று இடங்களில் மறுநடவு செய்யும் பணிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆலங்குளம் பஸ் நிலையம் கீழ்புறம் சுமார் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இருந்தது. நான்குவழிச்சாலை பணிக்காக அந்த மரத்தின் கிளைகள் வெட்டும் பணி ஒருவாரத்திற்கு மேலாக நடந்தது.

ஆலங்குளத்தின் பெருமையாக கருதப்படும் இந்த ஆலமரத்தை மறுநடவு செய்ய வேண்டுமென அங்குள்ள இளைஞர்கள் பசுமை இயக்கம், அசுரா நற்பணி மன்றத்தினர் முடிவு செய்தனர்.  இதையடுத்து அவர்கள் ஆலமரத்தை முழுமையாக வெட்டபடாமல் நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன் 2 கிரேன், 2ஜேசிபி உதவியுடன் 16 டன் எடை கொண்ட ஆலமரத்தை வேருடன் பிடுங்கி ஆலங்குளம் தொட்டியான்குளத்தின் கரையோரம் நடப்பட்டது. ஆலங்குளத்தின் அடையாளமாக விளங்கிய ஆலமரத்தை பிடுங்கி மறுநடவு செய்த பசுமை இயக்கம், அசுரா நண்பர்கள், சமூக ஆர்வலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : Alangulam , Alangulam: The Green Movement for uprooting and replanting a 150-year-old banyan tree in Alangulam for a four-lane road.
× RELATED அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி