சென்னை பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு..!!

சென்னை: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அதிகாரி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் கல்லூரி முதல்வர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், வரும் ஜூன் 2-ம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள், ஜூன் 15-ம் தேதி முதல் நடைபெறும் என்றும், சென்னைப் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் அறிவிப்பு பொருந்தும் என்றும் தெரிவித்தார். தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதை கல்லூரி தகவல் பலகையில் இடம்பெறச் செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைகழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் வரும் ஜூன் 2-ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் பல்கலைக்கழக அதிகாரிகள் செய்துவந்தனர். இந்த நிலையில், இன்று சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூன் 2-ம் தேதி தொடங்கவிருக்கும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலையின் செமஸ்டர் தேதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: