ஆசிய கோப்பை ஹாக்கி சூப்பர்-4ல் இந்தியா

ஜகர்தா: ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி இந்தோனேசியாவில் நடக்கிறது. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்தியா நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தோனேசியாவுடன் மோதியது. முன்னதாக இந்தியா முதல்  லீக் ஆட்டத்தில் ஜப்பானிடம் தோற்றாதாலும், 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் டிரா செய்ததாலும் ஒரே ஒரு புள்ளியுடன் 3வது இடத்தில் இருந்தது. எனவே இந்தோனேசியாவை அதிக கோல் வித்தியாசத்தில் வீழ்த்தினால் தான் சூப்பர்-4 வாய்ப்பு என்ற நிலை. காரணம் வெற்றிப் பெற்றாலும் இந்தியா 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில்தான் இருக்கும். காரணம் பாகிஸ்தானும் தலா ஒரு வெற்றி, டிரா, தோல்வி மூலம் அதே 4 புள்ளிகளை பெற்றிருந்ததுான். கோல்களின் எண்ணிக்கை அடிப்படையில் 2வது இடத்தில் இருந்தது.

அதனால் அதிக கோல்கள் அடிக்க வேண்டியதை உணர்ந்த இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி கோல் மழை பொழிந்தனர். முடிவில் தமிழக வீரர் கார்த்தி செல்வம் அடித்த 2 கோல் உட்பட  16-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிப் பெற்றது. அதனால் 4 புள்ளிகள் பெற்றாலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்தியா 2வது இடத்தை பிடித்து சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறியது. பாகிஸ்தான் வெளியேறியது. ஜப்பான் 9 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றில் நுழைந்ததுள்ளது. பிரிவு பி-ல் மலேசியா 9 புள்ளிகளுடனும், கொரியா 6 புள்ளிகளுடனும் சூப்பர்-4  சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளன. சூப்பர்- 4 சுற்று ஆட்டங்கள் நாளை மறுதினம் தொடங்குகின்றன.

Related Stories: