சில்லி பாய்ன்ட்...

* மிர்பூரில் நடக்கும் 2வது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 365ரன் எடுத்தது. அதனையடுத்து முதல் இன்னிங்சை நேற்றும் தொடர்ந்து விளையாடிய இலங்கை 506ரன் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் மாத்யூ 145*, சண்டிமால் 123ரன் குவித்தனர். வங்கதேசம் தரப்பில் ஷாகிப் 5, ஹோசைன் 4 விக்கெட்களை அள்ளினர். தொடர்ந்து 141ரன் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2வது இன்னிங்சை தொடங்கியது. நான்காவது நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் அந்த அணி 13ஓவரில் 4விக்கெட் இழப்புக்கு 34ரன் சேர்த்துள்ளது. அதனால் வங்கதேசம் 107ரன் பின்தங்கிய நிலையில் கடைசி நாளான இன்று 2வது இன்னிங்சை தொடர்கிறது.

* பிரெஞ்ச் ஓபன் நடப்பு சாம்பியன் பார்போரா கிரெஜ்சிகோவா(செக் குடியரசு) முதல் சுற்றுடன் வெளியேறினார். இரட்டையர் பிரிவிலும் நடப்பு சாம்பினான பார்போரா, அந்தப் பிரிவில் கேத்ரினா சினியகோவா உடன் விளையாட இருந்தார். ஆனால் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதால் தொடரில் இருந்து விலகியுள்ளார். மற்றொரு செக் வீராங்கனை மரியே பவுஸ்கோவாவுக்கும்  கொரோனா தொற்றால் வெளியேறி உள்ளார்.

* சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ‘அதிவேகம்’ உம்ரான் மாலிக். காஷ்மீரில் உள்ள சொந்த ஊருக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடவே ஐபிஎல் மூலம் கிடைத்த வருவாயில் தன் தந்தைக்கு கார் வாங்கி பரிசளித்து உள்ளார் உம்ரான்.

Related Stories: