அண்ணா பல்கலையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 11 ஆக உயர்வு: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 19ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது.இதையடுத்து அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்ததில், 3 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வந்த பரிசோதனை முடிவுகளில் மேலும் மூன்று மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது.

இதனை தொடர்ந்து நேற்று மேலும் 2 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால், அவர்கள் வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு சென்னை ஐஐடியில் 198 மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: