×

சென்னை - கனடா, மதுரை-மலேசியா, நாமக்கல் -நியூயார்க், சேலம் - தென் ஆப்பிரிக்கா வரை தமிழ் கலாசாரம் உள்ளது: பிரதமர் மோடி உரை

சென்னை: நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார். தமிழ்நாடும், தமிழ்நாட்டின் கலாசாரமும், மக்களும் சிறப்பு வாய்ந்தவை என கூறினார். தமிழ் மொழி நிலையானது, தமிழ் கலாசாரம் உலகளாவியது. செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாடலை மேற்கொள் காட்டி பேசினார். ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தலைச் சிறந்தவர்களாக உள்ளனர். செவித்திறன் குறைவுறறோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் சாதனை படைத்துள்ளனர். செவித்திறன் குறைவுறறோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழக மாணவி சாதானைப் படைத்துள்ளார். தமிழகத்தின் பாரம்பரிய உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்தார் அமைச்சர் எல்.முருகன்.

தமிழ்நாட்டில் ரூ.31,000 கோடியிலான திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. பெங்களூரு - சென்னை விரைவுச் சாலை திட்டம் இரு முக்கிய நகரங்களை இணைக்கிறது. சாலைத்திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியோடு நேரடி தொடர்புடையவை. மதுரை-தேனி அகல ரயில்பாதை திட்டம் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். எதிர்கால தேவையை நோக்கமாகக் கொண்டு நவீன திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் வீடுகள் பெற்ற அனைவருக்கும் வாழத்துக்கள். சூழலுக்கு இசைவான இல்லங்களை உருவாக்குவதில் உலக அளவிலாள சவாலை எதிர்க்கொண்டு வெற்றி பெற்றுள்ளோம்.

சென்னை - கனடா, மதுரை-மலேசியா, நாமக்கல் -நியூயார்க், சேலம் - தென் ஆப்பிரிக்கா வரை தமிழ் கலாசாரம் உள்ளது. சென்னையை போன்று இந்தியாவில் பிற இடங்களிலும் சரக்கு முனையம் கட்டப்படும். எரிவாயு குழாய் திட்டம் தொலைநோக்கு பார்வையுடன் செய்ல்படுத்தப்படுகிறது. இங்குள்ள அனைவரும் உங்கள் குழந்தைகள் சிறந்த எதிர்காலத்தை அளிக்க விரும்புகிறீர்கள். தலைசிறந்த உட்கட்டமைப்பு வசதிகளால் மட்டுமே எதிர்காலத்தை அளிக்க முடியும். ஏழைகளின் நலனை உறுதி செய்தற்காகவே அனைத்து உட்கட்டமைப்பு துறைகளிலும் திட்டங்களை நிறைவேற்றுகிறோம். திட்டங்கள் அனைவரையும் சென்று சேரும் வகையில் செயல்பட்டு வருகிறோம். அதிவேக இணைய சேவை, எரிவாயு வழித்தடம், சாலை கட்டமைப்பு என புதிய பாதைகளில் வளர்ச்சிக்காக பயணிக்கிறோம்.

ரூ.7.5 கோடி லட்சம் கோடி மூலதன செலவுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். தேசிய கல்விக் கொள்கையால் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும். பகாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. பனாரஸூ பல்கலைக்கழகம் எனது தொகுதியான வாரணாசியில் உள்ளது. இலங்ககை்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர் உள்ளிட்ட அனைவருக்கும் உதவிகள் செய்யப்படும். அண்டை நாடு என்பதுடன் நட்பு நாடு என்கிற வகையில் உணவு. மருத்துவம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும். யாழ்பாணத்திற்கு சென்று திட்டங்களை தொடங்கி வைத்த இந்திய பிரதமர் நான் என கூறினார். பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு, இந்தியா துணை நிற்கும். ஈழத்தமிழர்கள் உள்பட அனைவருக்கும் இந்தியா உதவி வருகிறது என கூறினார். வணக்கம் என கூறி உரையை பிரதமர் மோடி நிறைவு செய்தார்.

Tags : Chennai ,Canada ,Madurai ,Malaysia ,Namakkal ,New York ,Salem ,South Africa ,Modi , Chennai - Canada, Madurai - Malaysia, Namakkal - New York, Tamil Culture, Modi
× RELATED இந்திய மாணவர் சுட்டு கொலை: கனடாவில் பயங்கரம்