இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

கொழும்பு: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா வரும் மே 31-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கஜபா படைப்பிரிவை சேர்ந்த மேஜர் ஜெனரல் விகம் லியகனே இலங்கை ராணுவத்தின் தொனர் படையின் கட்டளை தளபதியாக பணியாற்றினார்.

ராணுவத்தின் 58-வது தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பதவியில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் அவர் படைகளின் தலைமை அதிகாரியாக பதவி ஏற்றார். இந்நிலையில் வரும் ஜூன் 1-ம் தேதி விகம் லியகனே இலங்கையின் ராணுவ தளபதியாக பதவி ஏற்கவுள்ளார்.

கோட்டாபாய ராஜபக்சவின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவரான சவேந்திர சில்வாவின் இந்த முடிவு இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: