சினிமாவில் தனித்திறமையை வளர்க்க கலைஞரும் முக்கியக் காரணம் : கமல்ஹாசன்

சென்னை : சினிமாவில் தன் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள கலைஞர் கருணாநிதி முக்கிய காரணம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார், சென்னை தேனாம்பேட்டையில்  உள்ள நட்சத்திர விடுதியில் விக்ரம் படம்குழுவின் செய்தியாளர்கள்  சந்திப்பு நடைபெற்றது. அப்போது  பேசிய கமல்ஹாசன் சினிமா என்பது உலகளாவிய தனி மொழி அது எழுதுவதற்கு தனித்திறமை வேண்டும் என்னுடைய தனித்திறமையை வளர்த்துக்கொள்ள கலைஞர் கருணாநிதி முக்கிய கரணம் என்றார்.

 கலைஞர் கருணாநிதின்  பிறந்தநாளில் விக்ரம் படம் வெளியாவதில் மகிழ்ச்சி என கூறிய கமல்ஹாசன் சினிமா சேர்த்து கலைஞரைப் பற்றி சொல்வதற்கு ஆயிரம் பக்கங்கள் போதாது  என்றார். விக்ரம் படத்தின் 2ம் பாகம் வரும் அதற்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குனர் என தெரிவித்த கமல்ஹாசன், இந்தியன் 2 படம் கட்டாயம்  உருவாகும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

Related Stories: