×

பிரதமரின் வருகையால் தமிழகத்துக்கு பல நன்மை கிடைக்கப்போகிறது: தமிழக பாஜ தலைவர் அறிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு ரூ.31,400 கோடி மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். பிரதமரின் வருகையில் பல்வேறு நன்மைகள் கிடைக்கப் போகிறது. பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் சரக்கு போக்குவரத்து கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இது மேலும் இரு மடங்காக உயரக்கூடிய நிலையில் உள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள் கோடிக் கணக்கான பணத்தை சரக்கு போக்குவரத்திற்காக செலவழிக்கின்றனர். எனவே தயாரிப்பாளர்களின் சுமையைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க புதிய கட்டமைப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. அதி விரைவு சக்தி என்ற தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக 35 பன்முனை சரக்கு பூங்காக்களை நாடு முழுக்க அமைக்கப்பட உள்ளது. இதனால் சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான 158 ஏக்கர் பரப்பளவில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் அமைகின்ற பூங்கா மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu , Tamil Nadu is going to get many benefits from the Prime Minister's visit: Tamil Nadu BJP leader statement
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...