×

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் 3500 ஆண்டுகள் பழமையான மாமரத்தில் 4 சுவைகளுடன் கனிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 3500 ஆண்டுகள் பழமையான அதிசய மாமரத்தில், 4 சுவைகளுடன் மாங்கானிகள் காய்த்து கொத்து, கொத்தாக தொடங்குகின்றன.உலக பிரசித்தி பெற்ற, பஞ்ச பூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் விளங்குகிறது. இக்கோயில் கருவறையில் உள்ள சுவாமி மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்மனையும் தரிசனம் செய்து செல்கின்றனர்.இந்த கோயிலின் கருவறைக்கு பின்புறம், பிரகாரத்தில் ஒரு மாமரம் அமைந்துள்ளது. மரத்தின் அடியில் சிவன், அம்மனுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் காட்சியளிக்கிறார். அம்மன் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்ததாக கூறப்படுகிறது. இதையெட்டி, இன்றும் இங்கு பல ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்படுகிறது.

குறிப்பாக, இங்குள்ள மாமரம் சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. இதனை, 4 வேதங்களையும் நான்கு கிளைகளாக கொண்ட தெய்வீக மரம் என போற்றப்படுகிறது. அதில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகை சுவைகளை கொண்ட இந்த மரத்தில் கனி காய்க்கின்றன.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த மாமரத்தின் கனியை சாப்பிட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். தற்போது மாமரத்தில் 4 சுவையுடன் மாங்காய்கள் காய்க்க தொடங்கியுள்ளன. இந்த அதிசய மாமரத்தினை உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பார்த்து வியந்து செல்கின்றனர்.

Tags : Kanchi Ekambaranathar Temple , At the Kanchi Ekambaranathar Temple 3500 years old Fruits with 4 flavors in the mango
× RELATED காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் லட்ச தீபப் பெருவிழா