காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்கூழு கூட்டம் கலைஞர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும்: க.சுந்தர் எம்எல்ஏ பேச்சு

காஞ்சிபுரம்: திமுக செயற்குழு கூட்டத்தில், திமுக தலைவர் மறைந்த கலைஞர் பிறந்தநாளை நலதிட்ட உதவிகள் வழங்கி கோலாகலமாக கொண்டாட வேண்டும் என காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பேசினார்.காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் நடந்தது. மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன், மாவட்ட பொருளாளர் கோகுல கண்ணண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்தது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை 60 சதவீதம் நிறைவேற்றி சிறப்பாக ஆட்சி செய்யும் முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் பிறந்தநாளை மாவட்டம் முழுவதும் கொடியேற்றி, மரக்கன்று நட்டு, இனிப்பு, அன்னதானம் வழங்கி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளித்து கோலாகலமாக கொண்டாட வேண்டும்.வரும் 28ம் தேதி அரசினர் தோட்டத்தில் முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் சிலை திறப்பு விழாக்கு அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும். திராவிட மாடல் என்பதை உருவாக்கி மிக சிறப்பான செயல்பாட்டை தமிழக முதல்வர் செய்து வருகிறார். அவருக்கு பாராட்டு தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் எம்பி செல்வம், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், எஸ்.கே.பி.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் வெடால் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், பூபாலன், சாலவாக்கம் குமார், ஞானசேகரன், சேகர், குமணன், சத்ய சாய், தம்பு ராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அப்துல்மாலிக், யுவராஜ், அவைத்தலைவர் சந்துரு, ஒன்றிய பொருளாளர் தசரதன், சாட்சி சண்முகசுந்தரம், தொமுச இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: