ஹவுரா- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்தவர்களுக்கு சீட் கொடுக்காமல் தகராறு: வடமாநில ஆசாமிகள் அட்டகாசம்

செங்கல்பட்டு: ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் செங்கல்பட்டு மார்க்கமாக செல்கிறது. நேற்று சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயில் புறப்பட்டது. அதில், சுமார் 200 வடமாநில ஆசாமிகள், முன்பதிவு பெட்டியில் அமர்ந்து பயணம் செய்தனர். முன்பதிவு செய்தவர்கள், இருக்கையை விடும்படி கேட்டனர். அதற்கு, வடமாநில ஆசாமிகள் தகராறு செய்தனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகள், செங்கல்பட்டு வரை, நின்று கொண்டே பயணம் செய்தனர்.

பின்னர் செங்கல்பட்டு ரயில் நிலையம் சென்றதும், முன்பதிவு செய்த பயணிகள், ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், அங்கு சென்று விசாரித்தபோது, அவர்கள் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார், வடமாநில ஆசாமிகளை கீழே இறக்கி மாற்று ரயிலில் அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.மேலும் அதிகமாக பெண்கள் பயணித்த பெட்டிகளில், அரைகுறை ஆடைகளுடன் வடமாநில ஆசாமிகள் பயணித்ததாகவும், பெண்கள் பல இடங்களில் ரயிலை நிறுத்தி, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: