சில்லி பாயின்ட்...

* இங்கிலாந்து அணியின்  பயிற்சியாராக  நியூசிலாந்தின் முன்னாள் அதிரடி  ஆட்டக்காரர் பிரெண்டன்  மெக்கல்லம் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக  நியூசி. அணி முன்னாள் கேப்டன்  டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக  ஆண்ட்ரூ மெக்டொனால்டு இருக்கிறார்.

* ஹாக்கி இந்தியா அமைப்பில் ஆயுட்கால உறுப்பினராக இருப்பதன் அடிப்படையில், 2017ல் நடந்த இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓசி) தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார் நரிந்தர் பத்ரா. இந்நிலையில், ஹாக்கி இந்தியாவில் அவர் வகித்த பதவி சட்டவிரோதமானது என டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்ததை அடுத்து, ஐஓசி தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

* டெஸ்ட் போட்டிக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி 10வது இடத்திலும், ரோகித் ஷர்மா 8வது இடத்திலும் நீடிக்கின்றனர். பந்துவீச்சு தரவரிசையில் ஆர்.அஷ்வின் 2வது இடத்தையும், பும்ரா 3வது இடத்தையும் தக்கவைத்துள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின் இருவரும் முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர்.

* ஐபிஎல் லீக் சுற்றில் 14 போட்டியில் 22 விக்கெட் வீழ்த்தி அசத்திய சன்ரைசர்ஸ் வேகம் உம்ரான் மாலிக், தனது உடல்தகுதியை தக்கவைத்துக் கொண்டால் அவர் நீண்ட காலத்துக்கு சிறப்பாக விளையாட முடியும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்க அணியுடன் நடக்க உள்ள டி20 தொடருக்கான இந்திய அணியில் உம்ரான் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: