×

தமிழகத்தில் 15,108 பேருக்கு கொரோனா சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: மருத்துவமனையில் 374 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் நேற்று  989  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 374பேர் உயிரிழந்துள்ளனர்.  இது குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1,73,724 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 15,108 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா சிகிச்சை முடிந்து 27,463 பேர் வீடு திரும்பினர். எனவே, மருத்துவமனை, வீடுகளில் 1,62,073 தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 374 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் உயிர் இழப்பு மொத்தம் 29,280 ஆக உயர்ந்துள்ளது.  நேற்றைய மொத்த பாதிப்பில் சென்னையில் 989 பேர், செங்கல்பட்டு 586, கோவை 1,982,  ஈரோடு 1,353, காஞ்சிபுரம் 305, சேலம் 894, தஞ்சாவூர் 645, திருவள்ளூர் 392,  திருப்பூர் 844, திருச்சி 420 273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….

The post தமிழகத்தில் 15,108 பேருக்கு கொரோனா சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: மருத்துவமனையில் 374 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...