கறம்பக்குடி அருகே தீ விபத்து தைல மரக்காடு, வாழை தோப்பு எரிந்து சேதம்

கறம்பக்குடி : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தைல மர தோப்பு வெட்டப்பட்டுள்ளது அதன் பிறகு காய்ந்து கிடந்த சருகுகள் திடீரென்று தீ பிடித்து எரிந்து சேதமாகியுள்ளது சேதமான பகுதிக்கு அருகில் அந்த கிராமத்தை சேர்ந்த ஆரோக்கிய அருள் தாஸ் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பின் ஒரு பகுதி தீ பிடித்து எரிந்த சருகுகளின் வெப்பம் மூலம் வாழை தோப்பும் எரிந்தும் சேதமடைந்துள்ளது.

உடனடியாக கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தை ராசு தலைமையில் விரைந்து சென்று முழுவதும் எரிவதற்குள் தீயை அணைத்து தீயணைப்பு வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: