×

செம்பனார்கோயில் அருகே பொன்செய் கிராமத்தில் பஸ் நிறுத்த நிழற்குடை சீரமைக்க கோரிக்கை

செம்பனார்கோயில் : தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பூம்புகார் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். மேலும் கீழப்பெரும்பள்ளம் கேது கோயில், திருவெண்காடு புதன் கோயில் மற்றும் அங்கு உள்ள பஞ்ச நரசிம்மர் கோயில்களுக்கு பக்தர்கள் வருகின்றனர். இதனால் மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் பஸ், கார், டூரிஸ்ட் வேன் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான் ஊராட்சிக்குட்பட்ட பொன்செய் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்த நிழற்குடை சேதமடைந்து காட்சியளிக்கிறது.

அந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பஸ்சுக்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகள் கான்கிரீட் பெயர்ந்து மேலே விழுந்தது விபத்து ஏற்படுமோ என்று அச்சத்துடன் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்தால் அந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் ஒதுங்குவதற்கு லாயக்கற்றதாக உள்ளது.
அங்கு பயணிகள் உட்காரும் சிமெண்ட் கட்டையும் உடைந்து காணப்படுகிறது. எனவே நிழற்குடையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Ponsei ,Sembanarkoil , Sembanarkoil: Poompuhar is one of the most popular tourist destinations in Tamil Nadu. Here from Tamil Nadu and other states
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை