வேலூரில் சம்பள உயர்வு கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள் -எம்எல்ஏ, மேயர், கமிஷனர் சமரசம்

வேலூர் : வேலூரில் சம்பள உயர்வு கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்களை எம்எல்ஏ, மேயர், கமிஷனர் சமரசம் செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள் சம்பள உயர்வு வழங்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் 10 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 2ம் நாளான நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் அங்கு வந்து சமாதானம் செய்ய முயன்றனர்.

அப்போது அவர்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும், பிடித்தம் செய்யும் பி.எப். தொகையை சரியாக கணக்கில் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, கமிஷனர் சங்கரன் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினார்.

அப்போது, வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் கூறுகையில், ‘தமிழக முதல்வர் ஏழை, எளிய மக்களுக்காக நலத்திட்டங்களை செய்து வருகிறார். சம்பள உயர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நிதித்துறைக்கு சென்றுள்ளது. பின்னர் மாநகராட்சிக்கு வந்தவுடன் சம்பளம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது கான்ட்ராக்டரிடம் பேசி, ₹280ல் இருந்து ₹20 உயர்த்தி ₹300 ஆக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மவிரைவில் சம்பள உயர்வு குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார். மாநகராட்சி பணியாளர்கள் முற்றுகையிடுவது முறையல்ல. துப்புரவு பணியாளர்களுக்காகத்தான் முதல்வர் பாடுபட்டு வருகிறார். சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூய்மைபணியாளர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திரைப்படம் எடுத்துள்ளார். அதனை நீங்கள் பார்க்க வேண்டும்.

தூய்மைபணியாளர்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார். இதுகுறித்து தூய்மைப்பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், எங்களுக்கு சம்பள உயர்வு கோரிக்ைகயை வலியுறுத்தி நாளை(இன்று) கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம், என்றார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சியில் தூய்மைபணியார்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர், கலைந்து சென்றனர். அப்போது திடீரென நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்த 8 பேர் கட்சி கொடியுடன் வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்’ என்றனர்.

Related Stories: