×

சென்னையில் மழைநீர் வடிகால்வாய்களை அமைச்சர் திரு.எ.வ. வேலு நேரில் ஆய்வு

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிகளில் பகுதிகளில் மடுவண்கரை, கிண்டி மற்றும் ஆலந்தூர் (எம்.கே.என்.நகர்) மழை காலங்களில் மழைநீர் வடிகால்வாய்களை இன்று (25.5.2022), பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் கன மழையின் போது மடுவண்கரையில் வெள்ள நீர் சூழ்ந்து, மழை நீர் வடிய தாமதம் ஏற்படுகிறது. இந்த வெள்ள நீரின் ஒரு பகுதி எம்.கே.என் சாலை வடக்கு வழியாக அண்ணா சாலையினை கடந்து ஆலந்தூர் சாலை வழியாக அடையாற்றினை அடைகிறது.

மறு பகுதி வெள்ள நீர் தற்போது முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் சாலை தெற்கு (எம்.கே.என் ரோடு) மற்றும் மடுவண்கரை பகுதிகளிலிருந்து இரயில்வே தண்ட வாளத்தில் உள்ள சிறுபாலத்திiன கடந்து மசூதி காலனி, வண்டிக்காரன் தெரு வழியாக வேளச்சேரி ஏரியினை அடைகிறது. இதனால் மசூதி காலனி, வண்டிக்காரன் தெரு பகுதிகள் வெள்ளத்தினால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மடுவண்கரை தெற்குப் பகுதியில் மழை காலங்களில் தேங்கும் நீரினை எம்.கே.என். சாலை வடக்கு வழியாக, GST சாலையை கடந்து அடையாற்றினை அடையும் வகையில் அகலமான மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதைக் குறித்து ஆராயப்பட்டது.

ஆண்டுதோறும் கனமழையின்போது கத்திப்பாரா பகுதியில் சாலையின் இடது புறம் உள்ள ஹாப்லிஸ் ஹோட்டல் அருகே மழைநீர் தேங்கி போக்குவரத்து தடைபடுகிறது. இம்மாதிரி தண்ணீர் தேங்குவதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதனை நீக்கிடும் வகையில் நிரந்தர வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ. 70 இலட்சம் மதிப்பீட்டில் 2 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் உள்ள வார்க்கப்பட்ட கான்கிரீட் பிளாக்குகள் (Precast Box Culvert) மூலம், சாலையின் குறுக்கே வெட்டிப்பதிக்கப்படும். இம்முறையான கட்டுமானத்தால் இரு தினங்களில் பாலத்தினை விரைவாகவும் செய்து முடிக்க இயலும். இங்கு வழக்கமான முறையில் பாலம் கட்டினால் ஏற்படும் காலதாமதமும் போக்குவரத்து இடையூறும் முழுவதும் தவிர்க்கப்படும்.

மேலும், ஜவஹர்லால் நேரு சாலையில் (ஈக்காட்டுத்தாங்கல்) அம்பாள் நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்திற்கு கடந்த 2021 நவம்பர் மாதத்தில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.   
இதனை போக்க நிரந்தர தீர்வாக அம்பாள் நகர் முதல் அடையாறு பாலம் வரை பழைய செங்கல் வளைவு வடிகாலுக்கு பதிலாக அளவில் பெரிய புதிய கான்கீரிட் வடிகால் அமைக்கும்படி பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் 13.11.2021 அன்று உத்தரவிட்டார்கள். பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் அமைச்சர் அவர்கள் உத்திரவிட்டபடி CRIDP 2021-22 திட்டத்தின்கீழ், 400 மீட்டர் நீளத்திற்கு ரூ.3 கோடி மதிப்பிட்டில் பணி ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் ஆகஸ்டு 2022 மாதத்திற்குள் முடிக்கப்படும். இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் அவர்கள், சென்னை பெருநகர ஆணையர் திரு.ககன்தீப் சிங்பேடி இ.ஆ.ப., மண்டல குழு தலைவர் திரு.துரைராஜ், நெடுஞ்சாலைகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Chennai ,Shri ,A. Etb Velu , Minister for Rainwater Drainage in Chennai Velu interview in person
× RELATED ஸ்ரீ ஸாயி பாபா புராணம்!