சென்னையில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலர்...

சென்னை:சென்னையில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஒட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அனகாபுத்தூரை சேர்ந்த ராமதுரை என்பவர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி சென்று பல்லாவரத்தில் மகேஷ்குமார் என்பவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து தலைமை காவலரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போக்குவரத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விபத்தில் காயமடைந்த மகேஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

Related Stories: