×

கொரோனா பொதுமுடக்கத்தின்போது தென்மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ரயில்சேவைகள் மீண்டும் தொடங்கப்படவில்லை: பயணிகள் குற்றசாட்டு

ராமநாதபுரம்: கொரோனா பொதுமுடக்கத்தின்போது தென்மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட பெரும்பாலான ரயில்சேவைகள் மீண்டும் தொடங்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். நெல்லையில் இருந்து விருதுநகர் வழியாக மயிலாடுதுறை மற்றும் ஈரோடு இணைப்புபயணிகள் ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை, மதுரை, விருதுநகர் வழியாக கன்னியாகுமரிக்கு வாரம் 3 முறை இயக்கப்பட்டு வந்த எக்ஸ்ஃப்ரஸ் ரயில்களும் கொரோனா காலத்திற்கு பின் இயக்கப்படவில்லை என தென்மாவட்ட மக்கள் கூறுகின்றனர்.

இதேபோல் செங்கோட்டையிலிருந்து மதுரைக்கும் இருவழியாக நாள்தோறும் 3 முறை இயக்கப்பட்டு வந்த ரயில் தற்போது 2 முறை மட்டுமே இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் 3 முறை இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 1 முறை மட்டுமே இயக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயில் 4 முறை இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 1 முறை மட்டுமே இயக்கப்படுவதாகவும், நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் 3 முறை முறை இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 1 முறை மட்டுமே இயக்கப்படுவதாகவும் அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவிற்கு முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் பழைய அளவில் மீண்டும் இயக்கவேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : southern ,Corona general strike , Rail services halted in southern districts during Corona general strike not resumed: Passenger blame
× RELATED நாட்டின் கடைக்கோடி மக்களவை தொகுதி: கன்னியாகுமரியில் கரை சேரப்போவது யார்?