கோவில்பட்டியில் நடைபெறும் 12வது தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டி: உ.பி., சட்டீஸ்கர் அணிகள் அரையிறுதிக்கு தகுதி

தூத்துக்குடி: கோவில்பட்டியில் நடைபெறும் 12வது தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டியில் உ.பி., சட்டீஸ்கர் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியின் முதல் ஆட்டத்தில் உ.பி. மற்றும் கர்நாடக அணிகள் மோதின. உத்திரப்பிரதேச அணி 6-1 என்ற கோல் கணக்கில் கர்நாடக அணியை வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் சட்டீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் அணிகள் மோதின; இதில் சட்டீஸ்கர் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

Related Stories: