×

உலக அளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.91 கோடியாக உயர்வு..!

வாஷிங்டன் : உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52.87 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.87 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,87,79,254 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49,91,65,111 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,33,10,727 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63,03,416 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள்:

அமெரிக்கா - பாதிப்பு - 8,52,41,016, உயிரிழப்பு - 10,29,524, குணமடைந்தோர் - 8,17,64,911

இந்தியா - பாதிப்பு - 4,31,41,200, உயிரிழப்பு - 5,24,490, குணமடைந்தோர் - 4,26,00,737

பிரேசில் - பாதிப்பு - 3,08,36,815, உயிரிழப்பு - 6,65,955, குணமடைந்தோர் - 2,98,85,580

பிரான்ஸ் - பாதிப்பு - 2,93,91,365, உயிரிழப்பு - 1,48,005, குணமடைந்தோர் - 2,86,57,773

ஜெர்மனி - பாதிப்பு - 2,61,57,826, உயிரிழப்பு - 1,38,879, குணமடைந்தோர் - 2,48,32,300


Tags : Corona , United States, World, Corona, India, China, Vaccine
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...