நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கலாம்: அரவை முகவர்களுக்கு அழைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் கழக கிடங்குகளில் அரிசியினை ஒப்படைப்பது வரை விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் அரவை முகவர்களை (முழு / பகுதி நேர) மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது. இதில் ஆர்வமுள்ள தனியார் அரவை ஆலைகள், தங்களது விருப்ப கடிதத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல மேலாளரை நேரிலோ அல்லது 044-27237650 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: