சில்லி பாயின்ட்...

* ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் டிரா செய்த இந்தியா, 2வது ஆட்டத்தில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதனால் இந்தியா சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு  கேள்விக்குறியாகி உள்ளது. ஏ பிரிவு புள்ளிப் பட்டியலில் நடப்புச் சாம்பியன் இந்தியா 3வது இடத்தில் பின்தங்கி உள்ளது.

* இலங்கையுடன் மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் 2வது டெஸ்டில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 365 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரகிம் 175* ரன், லிட்டன் தாஸ் 141 ரன் விளாசிய நிலையில் 6 வீரர்கள் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. இலங்கை பந்துவீச்சில் கசுன் ரஜிதா 5, அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட் வீழ்த்தினர். 2ம் நாள் முடிவில் இலங்கை முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்துள்ளது. ஒஷதா 57, குசால் 11 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கருணரத்னே 70 ரன், கசுன் ரஜிதா (0) களத்தில் உள்ளனர்.

* மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் சூப்பர்நோவாஸ் அணியுடன் நேற்று மோதிய வெலாசிட்டி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சூப்பர்நோவாஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன் (டானியா பாட்டியா 36, கேப்டன் ஹர்மன்பிரீத் 71, சுனே லுவஸ் 20*). வெலாசிட்டி 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன் (ஷபாலி 51, யாஸ்டிகா 17, வுல்வார்ட் 51*, கேப்டன் தீப்தி ஷர்மா 24*).

Related Stories: