ரூ.8,000 லஞ்சம் ஊராட்சி எழுத்தர் கைது

துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் புத்தாநத்தத்தை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். ஒப்பந்ததார். இவர் புத்தாநத்தத்தில் புதிய போர்வெல் மின் மோட்டார் மற்றும் பைப்லைன் அமைக்க ரூ.4 லட்சத்திற்கு டெண்டர் எடுத்துள்ளார். இந்த வேலையை முடித்ததும் அதற்கான பில் பாஸ் செய்வதற்காக புத்தாநத்தம் ஊராட்சி கிளார்க் வெங்கட்ராமன் 2% கமிஷனாக ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி முகமது இஸ்மாயில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த பணத்தை மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து வெங்கட்ராமனிடம் வழங்கியபோது, மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர்.

Related Stories: