மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் டி.ஆர்.: சிம்பு அறிக்கை

சென்னை:நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தருக்கு சில நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாய், வால்வுகளில் அடைப்பு இருப்பதாக கண்டறிந்தனர். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது. இதுகுறித்து நடிகர் சிம்பு வெளியிட்ட அறிக்கையில், ‘அப்பா இப்போது நலமாக உள்ளார்.  வயிற்று பகுதியில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் டாக்டர்கள் அறிவுரைப்படி அவரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்கிறோம்’ என்றார். மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டி.ராஜேந்தரை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: