சென்னையில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது: வானிலை மையம் தகவல்

சென்னை: கோடை வெயிலின் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று 105 டிகிரி வெயில் கொளுத்தியது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி  நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் விரைவில் முடிவுக்கு வர உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் நிலவியது. அதன் தொடர்ச்சியாக நேற்று 105 டிகிரி வெயில் நிலவியது.

கடலூர், கரூர், மதுரை, பரங்கிப்பேட்டை, திருத்தணி, வேலூர் மாவட்டங்களில் 102 டிகிரி, சேலத்தில் 100 டிகிரி வெயில் நிலவியது. இதற்கிடையே, வெப்பச்லனம் காரணமாக தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: