விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் தக்காளி விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளதைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க தமிழக அரசு கூட்டுறவுத்துறையின் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு கிலோ ₹70 முதல் ₹80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளியின் வெளிச்சந்தை விலை கட்டுப்படுத்தப்படும் வரை இந்நடவடிக்கை தொடரும். மேலும், தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 23ம் தேதி வரை 18 மெட்ரிக் டன் தக்காளி ₹0.15 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: