தேசிய தேர்வு முகமை அறிவிப்பு நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி வரை காலஅவகாசம்

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் நடத்தப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கு (நெட்) விண்ணப்பிக்க விரும்புவோர் மே 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேசிய அளவில் நடத்தப்படும் நெட் தேர்வு கடந்த 2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களில் நடத்தப்பட இருந்த நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேற்கண்ட இரண்டு தேர்வுகளையும் ஒன்றாக இணைத்து நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது.

தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்க வசதியாக, மே 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதனால் தகுதியுள்ள நபர்கள் ugcnet.nta.nic.in என்ற இணைய தளத்தில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், மேற்கண்ட இரண்டு தேர்வுகளுக்கும் முன்பு விண்ணப்பித்த நபர்கள் தங்கள் புகைப்படங்கள், ஆவணங்களையும் பதிவேற்ற முடியவில்லை என்றும் கட்டணங்களையும் மே 20ம் தேதிக்குள்  செலுத்த முடியவில்லை என்றும் பல்வேறு கோரிக்கைகளை தேசிய தேர்வு முகமைக்கு தெரிவித்தனர். அதனால் அவர்கள் மேற்கண்ட இணைய தளம் மூலம் இவற்றை பதிவு செய்வது எப்படி என்றும் அதற்கான வழிகாட்டு நெறிகளையும் இணைய தளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

Related Stories: