மாநில தலைவர், செயலாளர் அறிவிப்பு... திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் வரும் 29ம் தேதி நடக்கிறது

சென்னை: திமுக சட்டத்துறை தலைவர் ஆர்.விடுதலை, செயலாளர் இரா.கிரிராஜன் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை:திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி சிறப்புரை ஆற்றுகிறார். இக்கூட்டத்தில் சட்டத்துறை இணைச் செயலாளர்கள்-துணைச் செயலாளர்கள்-தலைமைக் கழக வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

இதில் திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட, மாநகர மற்றும் புதுச்சேரி மாநில அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் 99வது பிறந்தநாள், வழக்கறிஞர் அணி புதிய உறுப்பினர் சேர்த்தல், ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: