ஐஐடியில் பிஎஸ்சி டிப்ளமோ 101 பேர் சான்று பெற்றனர்

சென்னை:  சென்னை ஐஐடியில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்சி டிப்ளமோ படிப்பில் முதலில் சேர்க்கப்பட்ட 101 பேர் அதற்கான சான்றுகளை பெற்றுள்ளனர். இந்த படிப்பில் சேர்ந்து படித்தவர்கள் தமிழ்நாடு மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களையும், வெவ்வேறு வயதுடையவர்களாகவும் இருக்கின்றனர். இதுதவிர பல்வேறு சமூக பொருளாதார பின்புலத்தை கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்சி டிப்ளமோ படிப்பில முதல்முறையாக சேர்ந்துள்ள 101 பேரில் 15 சதவீதம் பேர் பணியில் இருப்பவர்கள். அதில் 9  மாணவர்கள் 20 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். 3 பேர் 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள். இந்த டிப்ளமோ சான்றுகளை  வழங்கும் நிகழ்வு  கடந்த 20ம் தேதி முதல் 22ம் தேதிவரை நடந்தது. இந்த பிஎஸ்சி டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படித்த மேற்கண்ட 101 மாணவ, மாணவியரும் இணை நுழைவுத் தேர்வு, ஜேஇஇ போன்ற தேர்வுகளை எழுதாமல்  இந்த படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: