சிகிச்சைக்காக தந்தை டி.ராஜேந்திரரை வெளிநாடு அழைத்து செல்கிறோம்: சிலம்பரசன் அறிக்கை.!

சென்னை: எனது தந்தை டி.ராஜேந்தர் நலமுடன் உள்ளார் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் உலா  வந்தன. இருப்பினும் அவரது குடும்பத்தின் சார்பாகவோ, அல்லது மருத்துவமனை நிர்வாகம் சார்பாகவோ இது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் சிகிச்சைக்காக தந்தை டி.ராஜேந்திரை வெளிநாடு அழைத்து செல்ல உள்ளதாக அவரது மகன் சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மறுத்த்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்.

அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிராத்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி எனவும் கூறினார்.

Related Stories: