க.காதலியுடன் தந்தை குடும்பம் நடத்துவதை வீடியோ எடுத்த மகனுக்கு தர்ம அடி

புதுக்கோட்டை: திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் ஆரோக்கிய சகாயராஜ். இவருக்கு சொந்தமாக 2 லாரிகள் உள்ளது. இதைவைத்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள கம்பெனிகளுக்கு வாடகைக்கு லாரி ஓட்டி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி. இவர்களது மகன் ஆனஸ்ட்ராஜ்(27). ஆரோக்கிய சகாயராஜ் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து விராலிமலை காமராஜர் நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகை எடுத்து வசித்து வருகிறார். அங்கு அவர் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவது வீட்டுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து தேன்மொழி, தனது கணவரை மீட்டு தருமாறு திருச்சி கன்டோன்மென்ட் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி போலீசார் ஆரோக்கிய சகாயராஜிடம் விசாரணை நடத்தினர். இதில் தேன்மொழியை விவாகரத்து செய்ய இருப்பதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து தனது தந்தை, அந்த பெண்ணுடன் சேர்ந்து இருப்பதை வீடியோவில் பதிவு செய்து போலீசாரிடம் அளித்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எண்ணி மகன் ஆனஸ்ட்ராஜ் விராலிமலைக்கு சென்று தந்தை பெண்ணுடன் இருக்கும்போது, வீடியோ எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு உதவிக்காக நண்பர்கள் குரு, கந்தன் ஆகியோரும் சென்றுள்ளனர்.

நேற்றிரவு அவர்கள் வீடியோ எடுக்க வந்தனர். இதைபார்த்துவிட்ட அவரது தந்தை, மகனை திட்டினார். இதில் தந்தை, மகனிடையே வாய்த்தகராறு முற்றி கைகலப்பானதில் வீட்டு முன் நின்ற டூவீலர், ஜன்னல் கதவுகள் சேதமடைந்தது. இந்த சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் ஆனஸ்ட்ராஜ் உள்ளிட்ட 3 பேரையும் திருடர்கள் என நினைத்து தர்ம அடி கொடுத்தனர். இதில் ஆனஸ்ட்ராஜ், கந்தன் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த விராலிமலை போலீசார் காயமடைந்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தந்தை, மகன் தனித்தனியே அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: