நாளை மறுநாள் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பேருந்து மோதி மாப்பிள்ளை பலி

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து மகன் வீரமணி(24). நெய்வேலி என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை மறுதினம் (26ம்தேதி) திருமணம் நடைபெற இருந்த நிலையில் வீரமணி நேற்று தனது பைக்கில் விருத்தாசலம் சென்று திரும்ப ஊருக்கு வந்து கொண்டிருந்தபோது விருத்தாசலம் - கடலூர் சாலையில் புதுக்கூரைப்பேட்டை தனியார் நர்சரி கார்டன் அருகே சென்றபோது, எதிரே கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த தனியார் பேருந்து வீரமணியின் பைக் மீது மோதியதில் வீரமணி இறந்தார்.இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: