×

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெயில் அளவு 30 மடங்கு அதிகரித்துள்ளதாக லண்டன் ஆய்வாளர்கள் தகவல்!!

டெல்லி : காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடப்பு ஆண்டில் வெப்பநிலையின் அளவு 30 மடங்கு அதிகரித்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் காலநிலையில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம் காரணமாக வெப்பத்தின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வண்ணம் உள்ளது. கடந்த மார்ச் - ஏப்ரல் காலகட்டத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெயில் அளவு 30 மடங்கு அதிகரித்துள்ளதாக லண்டன் காலநிலை பல்கலைக்கழக ஆய்வாளர் கூறியுள்ளார்.

மனிதர்களால் கால நிலை மாற்றம் ஏற்படாமல் இருந்து இருந்தால் இது போன்ற வெப்பம் 3000 ஆண்டுகளுக்கு பின்னரே ஏற்பட்டு இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நடப்பு ஆண்டில் கடும் வெயில் காரணமாக 90 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை ஆயிரங்களை தொடும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.


Tags : London ,India ,Pakistan , India, Pakistan, Weil
× RELATED லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்த...