ஒரே கிராமத்தில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்த வின்சென்ட் பால்ராஜ் என்பவரை முன்விரோதத்தின் காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த ஜான்மனோஜ் (29), அலெக்சாண்டர் (27), ஜஸ்டின்பவுல்ராஜ் (24), ரோசாரியோபிராங்க்ளின் (23), அலெக்சாண்டர் (27), அந்தோணிரெய்மண்ட் (27), ரூபன்லூர்துராஜ் (28) ஆகியோர் ஒன்று சேர்ந்து வழிமறித்து தடியால் சரமாரியாக தாக்கியும் கத்தியால் வெட்டியும் கொலை செய்ய முயற்சி செய்தனர். இதையடுத்து இவர்கள் 7 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் குற்றவாளிகள் அனைவரும் தொடர்ந்து மேற்படி கிராமத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அடிதடி, சண்டை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால் இவர்களது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கள்ளக்குறிச்சி எஸ்.பி. செல்வகுமார் பரிந்துரையின் பேரில் ஜான்மனோஜ் உள்பட 7 பேரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தர் அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து உளுந்தூர்பேட்டை போலீசார், குற்றவாளிகள் 7 பேரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: