விவசாய நிலங்களில் கச்சா எண்ணெய் கசிவதை தடுக்க வேண்டும்: பாழான நிலங்களை பார்வையிட்ட பி. ஆர். பாண்டியன் கோரிக்கை

திருவாரூர்: விவசாய நிலங்களில் குழாய் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்வத்திலுள்ள குறைகளை தமிழ்நாடு அரசு அமைத்த இஸ்மாயில் குழு அறிக்கையின்படி தீர்வு கண்ணும் வரை குழய்களில் கச்சா எண்ணெய் கொண்டு செல்வதுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பி அர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கொடூர் அடுத்த கருப்புளார் கிராமத்தில் விவசாய விளைநிலங்களில் கச்சா எண்ணெய்  பரவி விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட தமிழக அணைத்து விவசாய சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது காவிரி டெல்டாவில் திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி மூலம் கச்சா எடுக்கப்பட்டு சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையனத்திற்கு விளை நிலங்களுக்கு கீழே குழாய்கள் மூலமாக கொண்டு செல்லப்படுகின்ரனர் அவ்வாறு பாதிக்கப்படுள்ள குழாய்கள் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி அல்லாமல் பூமிமடத்திலிருந்து மூன்று அல்லது நான்கு அடி காலத்தில் பாதிக்கப்படுவதாக குற்றசாட்டினார்.

குறைந்த காலத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதால் விவசாய பணிகள் மேற்கொள்ளும்போது கோடை வெயில் தாக்கத்தாலும் அழுத்தம் ஏற்பட்டு  குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக கூறிய அவர் விளைநிலங்களை கச்சா எண்ணெய் கசிவதக தெரிவித்தார் இதனால் விவசாயி நிலங்கள் பாழாவதுடன் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறினார், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த இஸ்மாயில் குழு அறிக்கையின்படி தீர்வு காணப்பட வேண்டும் என்ற அவர் அதுவரை விளைநிலங்கள் வழியாக குழாய்களில் கச்சா எண்ணெய் கொண்டுசெல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொன்டுள்ளார்.

Related Stories: