மகளிர் டி.20 சேலஞ்சர்ஸ் சூப்பர் நோவாஸ்-வெலோசிட்டி இன்று மோதல்

புனே:ஐபிஎல் போன்று மகளிர் சேலஞ்ச் கோப்பை டி,20 தொடர் புனேயில் நேற்று தொடங்கியது. இதில் 3 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். நேற்று நடந்த முதல் போட்டியில், சூப்பர்நோவாஸ்- நடப்பு சாம்பியன் டிரையல் பிளாசர்ஸ் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த சூப்பர்நோவாஸ் 20 ஓவரில் 163 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 37, ஹர்லீன் டியோல் 35 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய டிரையல்பிளாசர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களே எடுத்தது. இதனால் சூப்பர் நோவாஸ் 49 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் மந்தனா 34 ரன் எடுத்தார். சூப்பர்நோவாஸ் தரப்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகி விருது பெற்றார். இன்று மாலை 3.30 மணிக்கு சூப்பர்நோவாஸ்-வெலோசிட்டி அணி சந்திக்கின்றன.

Related Stories: