ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் அரிய வகை ரோ இன மான் உயிரிழப்பு-வனத்துறையினர் விசாரணை

ஆம்பூர் : ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை சிக்னல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அரிய வகை ரோ இன மான் உயிரிழந்தது. ஆம்பூர் வனசரகத்திற்கு ட்பட்ட பல்வேறு காப்பு காடுகளில் அதிக அளவில் புள்ளிமான், கவரிமான், கஸ்தூரி மான் உள்ளிட்ட பல்வேறு இன மான்கள் வசித்து வருகின்றன. நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிக்னல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் ஒன்று உயிரிழந்தது.

இதை கண்ட அப்பகுதியினர் உடன் ஆம்பூர் வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடன் ஆம்பூர் வடக்கு பீட், வடபுதுப்பட்டு பிரிவின் வனவர் மற்றும் வனத்துறையினர் உடன் அங்கு வந்தனர். அப்போது இறந்த மான் அரிய வகையாக கருதப்படும் ரோ இனத்தை சேர்ந்தது என்பது தெரியவந்தது. உடன் அந்த மானின் சடலத்தை  வனதுறையினர் மீட்டு கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், இதுகுறித்து துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

Related Stories: