குரங்கு அம்மை நோயை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்: மருத்துவத்துறை செயலாளர் பேட்டி..!!

சென்னை: குரங்கு அம்மை நோயை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் மத்தியில் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், குரங்கு அம்மை ஆப்பிரிக்க நாடுகளில் பரவக்கூடிய நோய், ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

நோய் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் குரங்கு அம்மை நோய் தொடர்பான சோதனை நடைபெற உள்ளது. அண்ணா பல்கலை. விடுதியை தொடர்ந்து மற்ற விடுதிகளிலும் சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம் என்று கூறினார். BA A4 தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மக்கள் கவனக்குறைவாக உள்ளனர். பொது சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் தாங்களாக முன்வந்து பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடத்தில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது. கொரோனா கட்டுப்பாட்டில் உள்ள அதே நேரத்தில் மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என அறிவுரை வழங்கினார். தமிழகத்தை பொறுத்தவரை குரங்கு அம்மை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் மருத்துவத்துறை செயலாளர் தெரிவித்தார்.

Related Stories: