சமூக ஒற்றுமையை வலியுறுத்த தலித் சாமியாரின் எச்சில் உணவு சாப்பிட்ட எம்எல்ஏ: வீடியோ வைரல்

பெங்களூரு:  தலித் சாமியாரின் வாயிலிருந்து எடுத்து எச்சில் உணவை சாப்பிட்டடு கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமதுகான் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்திய வீடியோ பதிவுகள் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளன.பெங்களூரு சாம்ராஜ்பேட்டை, பாதராயனபுராவில் உள்ள ஆல் ஆஜர் பவுண்டேஷன் சார்பில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சாலை பெயர் சூட்டு விழா மற்றும் ஈத்  விழா கொண்டாடப்பட்டது. இதில் தலித் வகுப்பை சேர்ந்த நாராயணசுவாமி, சாம்ராஜ்பேட்டை ெதாகுதி எம்எல்ஏ ஜமீர் அகமதுகான் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஏழைகளுக்கு பல்வேறு நல திட்டங்கள் வழங்கப்பட்டது.

விழா மேடையில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது கான் சாமியார் நாராயணசாமி சாப்பிட்ட உணவை வாயிலில் இருந்து எடுத்து சாப்பிட்டார்.  இது சாதி, மதம் இடையிலான ஒற்றுமையின் அடையாளமாக விளங்குகிறது. ஜமீர் அகமதுகானின் செயல்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. பலர் ஆதரித்தும் சிலர் விமர்சனம் செய்தும் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.

Related Stories: