×

பாஜ மீது மம்தா தாக்கு ஹிட்லர் ஆட்சியை விட மோசமானது

கொல்கத்தா: ‘ஹிட்லர் ஆட்சியை விட பாஜவின் ஆட்சி மோசமானது’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஹிட்லர், பெனிட்டோ முசோலினி போன்றவர்களின் கொடுங்கோல் ஆட்சியை விட பாஜவின் ஆட்சி மோசமானது. பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு, ஒன்றிய விசாரணை அமைப்புகளைக் கொண்டு மாநில விவகாரங்களில் தலையிடுகிறது.

 நாட்டின் கூட்டாட்சி அமைப்பு மீது புல்டோசர் ஏற்றி பாழ்படுத்துகிறது. துக்ளக் ஆட்சியை கொண்டு வருகிறார்கள்.ஒன்றிய அமைப்புகளை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். எந்த அரசியல் தலையீடும் இல்லாமல், பாரபட்சமின்றி ஒன்றிய அமைப்புகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.Tags : Mamata Banerjee ,Bajaj ,Hitler , Mamta attacks Baja Worse than the Hitler regime
× RELATED கால்நடைகள் கடத்தல் வழக்கு...