பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒசாகாவை வீழ்த்தினார்

அமெண்டா: ஸ்வியாடெக் முன்னேற்றம் பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், அமெரிக்க வீராங்கனை அமெண்டா அனிசிமோவாவுடன் மோதிய ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் விலகிய முன்னாள் நம்பர் 1 ஒசாகா, நேற்று அமெண்டாவின் சவாலை எதிர்கொண்டார். இதில் அபாரமாக விளையாடிய அமெண்டா 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார்.

இப்போட்டி ஒன்றரை மணி நேரத்துக்கு நீடித்தது. மற்றொரு முதல் சுற்றில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 6-0 என்ற நேர் செட்களில் உக்ரைனின் லெசியா சுரென்கோவை எளிதாக வீழ்த்தினார். ஆண்ட்ரீஸ்கு (கனடா), குவித்தோவா (செக்.) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories: