அஜித் வேடத்தில் சல்மான் கான்

மும்பை: வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க உள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த படம் வீரம். இதில் தமன்னா, நாசர், தம்பி ராமையா, சந்தானம், அதுல் குல்கர்னி உள்பட பலர் நடித்தனர். இப்படம் இந்தியில் கபி ஈத் கபி தீவாலி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தமிழில் அஜித் நடித்த வேடத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளார். தமன்னா கேரக்டரில் பூஜா ஹெக்டே நடிக்க தேர்வாகியுள்ளார். படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

Related Stories: