ஜூனியர் என்டிஆர் படத்தில் கமல்ஹாசன்?

ஐதராபாத்: ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கமல்ஹாசனிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது.கேஜிஎஃப் 2 படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அவர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் உருவாகிறது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க கமல்ஹாசனிடம் பிரசாந்த் நீல் பேசியிருக்கிறார். சிலர் அந்த வேடம் படத்தில் முக்கியமானது, கேஜிஎஃப் 2 படத்தில் சஞ்சய் தத் நடித்தது போல் வலுவான கேரக்டராக இருக்கும் என்கிறார்கள்.

சிலரோ அது சஞ்சய் தத்தை போல வில்லன் வேடம்தான் என்றும் சொல்கிறார்கள். படக்குழு தரப்பில் கூறும்போது, ‘இது படத்தில் வில்லன் வேடம் அல்ல. முக்கியமான கேரக்டர். கதை கேட்டு, கமல்ஹாசனுக்கும் பிடித்திருக்கிறது’ என்றனர். ‘கமல்ஹாசனின் படங்களில் மற்ற ஹீரோக்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மற்ற ஹீரோக்கள் படத்தில் அவர் நடிப்பது பெரும்பாலும் நடந்ததில்லை. அதனால் இந்த படத்தில் அவர் நடிப்பது சந்தேகம்தான்’ என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Related Stories: