அக்‌ஷய் குமாருக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு

மும்பை: அக்‌ஷய் குமார் தனது படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.அக்‌ஷய் குமார் நடித்துள்ள படம் பிருத்விராஜ். இந்த படம் மன்னரான பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் பிருத்விராஜ் சவுகான் வாழ்க்கையை உயர்வாக காட்டுவதாக சொல்லி படமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவரை இழிவுபடுத்தும் வகையில் படத்துக்கு வெறும் பிருத்விராஜ் என தலைப்பிட்டுள்ளனர். இந்த படத்துக்கு சாம்ராட் பிருத்விராஜ் சவுகான் என பெயரிட வேண்டும். படத்தில் ராஜ்புத் இனத்தவரை எப்படி சித்தரித்துள்ளனர் என்பதை விளக்க வேண்டும். இதனால் திரைக்கு வரும் முன் இந்த படத்தை எங்களுக்கு திரையிட வேண்டும் என கர்ணிக் சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதேபோல், அகில பாரத சத்ரிய மகாசபா, சனாதன் சேனா ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்களும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: