ஊ சொல்றியா மாமா பாடகி கனிகா கபூருக்கு திருமணம்

லண்டன்: பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு லண்டனில் திருமணம் நடந்தது.இந்தியில் ராகினி எம்எம்எஸ் 2 படத்தில் பேபி டோல்மே டோல்னே தே, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலின் இந்தி பதிப்பு உள்பட பல பாடல்களை பாடியவர் கனிகா கபூர். தமிழிலும் பாடியுள்ளார். இவர் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் ஹதிராமனி என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களின் திருமணம் லண்டனில் நடந்தது. இதில் இரு குடும்பத்தார்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து பாடுவேன் என கனிகா கபூர் கூறியுள்ளார்.

Related Stories: