டிமாண்டி காலனி 2ம் பாகத்தில் அருள்நிதி

சென்னை: அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் டிமாண்டி காலனி. இந்த படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆனதை அடுத்து நேற்று படக்குழுவினர் இதனை கொண்டாடினார்.இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைத்தளத்தில் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கப்போவதில்லை என்றும் அவருடைய உதவியாளர் வெங்கி வேணுகோபால் இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் கதையை எழுதுவதோடு இந்த படத்தை அஜய் ஞானமுத்து தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.டிமாண்டி காலனி முதல் பாகத்தில் அருள்நிதி இறந்துவிடுவார். அதனால் அருள்நிதியை வைத்து மீண்டும் எப்படி இரண்டாம் பாகம் உருவாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். ‘அது சஸ்பென்ஸ்’ எனக் கூறிய அஜய் ஞானமுத்து, முதல் பாகத்தில் நடித்த அருள்நிதி உள்பட முக்கிய கேரக்டர்களும், மேலும் சில புதிய கேரக்டரில் சிலரும் நடிக்க உள்ளனர் என தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது.

Related Stories: